News December 18, 2025
கிருஷ்ணகிரி: ஓடும் லாரியில் பற்றிய தீ!

பால தொட்டனபள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியிலிருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் செல்வதற்காக சாலையில் இன்று 18.12.25 இரவு 2 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஜார்கலப்பட்டி கிராமம் அருகே சென்ற வண்டியில் இருந்து புகை வருவதை அறிந்து டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார். கீழே இறங்கி பார்த்தபோது லாரி தீ பிடித்ததை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
Similar News
News December 19, 2025
கிருஷ்ணகிரியில் 663 பேருக்கு வேலை ரெடி!

தமிழகத்தில் ஸ்னைடர் எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ.718 கோடி முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சென்னை மற்றும் கோவையில் உள்ள ஆலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதோடு, ஓசூரில் புதிய ஆலை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 663 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
கிருஷ்ணகிரி: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி!

கிருஷ்ணகிரி: வெள்ளாளப்பட்டியை சேர்ந்த குமார் என்பவர் தேன்கனிக்கோட்டையில் சாலை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (டிச.18) வேலை முடித்துவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் கல்லாவி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, இந்திரா நகர் பேருந்து நிலையம் அருகே இரவு 9 மணி அளவில், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் அதிவேகமாக வந்து மோதியது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
News December 19, 2025
கிருஷ்ணகிரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


