News January 14, 2026

கிருஷ்ணகிரி உழவர் சந்தையின் விலை நிலவரம்

image

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.14) காய்கறிகள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.16-20, உருளை: ரூ.25, பெரிய வெங்காயம்: ரூ.30, மிளகாய்: ரூ.40, கத்திரி: ரூ.18, வெண்டைக்காய்: ரூ.36, பீர்க்கங்காய்: ரூ.22, சுரைக்காய்: ரூ.14, புடலங்காய்: ரூ.26, பாகற்காய்: ரூ.20, அவரை: ரூ.28, கேரட்: ரூ.70, பீன்ஸ்: ரூ.50 என விற்பனை செய்யப்படுகின்றன.

Similar News

News January 31, 2026

கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

image

காவேரிப்பட்டிணத்தை சேர்ந்தவர் பசுபதி. இவர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தென்பண்ணை ஆற்றின் அருகே இவர் தனது தாய் மங்கம்மாளுடன் சேர்ந்து பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை ஆற்றில் மூழ்கடிக்க முயன்றுள்ளார். அப்பகுதி மக்கள் இருவரையும் தடுத்து குழந்தையை மீட்டு காவல் துறைக்கு தகவல் அளித்தனர். மேலும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News January 31, 2026

பெண் திடிர் மரணம், போலீசார் விசாரனை

image

ராணிபேட்டை மாவட்டத்தை சேர்ந்த தேவி 43, இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஜன-29 திடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2026

கிருஷ்ணகிரி: மது பழக்கத்தால் பறிபோன உயிர்!

image

நல்லூர் அடுத்த பெரிய எலசகிரியை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் (45). இவருக்கு தொடர் மதுபழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) மாலை வந்த வெங்கடேஷை அவரது மகன் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!