News August 24, 2025

கிருஷ்ணகிரி: உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 TECHNICIAN காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th முடித்த 18-28 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News August 25, 2025

வேகமெடுக்கும் ஓசூர் விமான நிலைய திட்டம்

image

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. பெரிகை–பாகலூர் இடையே தேர்வு செய்யப்பட்ட இந்த தளம் TAAL ஓடுபாதையிலிருந்து 15.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் மாநில அரசு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி அனுமதி கோர உள்ளது. இதற்கிடையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்தல் முன்மொழிவை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க உள்ளார்.

News August 24, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 24, 2025

கிருஷ்ணகிரி: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க்<> மூலம்<<>> விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (04343-230171) தொடர்பு கொள்ளுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!