News May 8, 2024

கிருஷ்ணகிரி: உயிரை பறித்த மழை… சோகம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் இன்று காலை 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இப்பகுதியே சோகமயமானது.

Similar News

News April 19, 2025

கிருஷ்ணகிரி முக்கிய தொடர்பு எண்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் 04343239400, மாவட்ட வருவாய் அலுவலர் 04343231300, திட்ட அலுவலர் 04343239364, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 04343239030, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 04343235655, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 04343235591, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 04343238777. ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

அரசு போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

image

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் திங்கள்(ஏப்.21) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!