News September 9, 2025

கிருஷ்ணகிரி இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், வங்கியில் ரூ.10 – 20 லட்சம் வரை கடன் பெற்று, சொந்தமாக உழவர் நல சேவை மையத்தை அமைக்கலாம். SHARE பண்ணுங்க

Similar News

News September 9, 2025

கிருஷ்ணகிரியில் 2000 போலீசார் பாதுகாப்பு பணி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வருகை தரவுள்ளார். முதல்வர் வருகையொட்டி போலீசார் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உட்பட, 8 மாவட்டங்களிலிருந்து, 2,000க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர்.

News September 9, 2025

BREAKING: கிருஷ்ணகிரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

image

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம், 2026 தேர்தலை நோக்கிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, மாவட்ட வாரியாகப் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். வரும் செப்.13-ல், திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், நவ.1 கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயைக் காண, தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

News September 9, 2025

ஓசூருக்கு வரும் முதலமைச்சர்: 2,000 போலீசார் பாதுகாப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு, வருகிற செப்.11. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். 2 நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் அவர், முதலமைச்சர் வருகையையொட்டி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து 2,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!