News November 22, 2025
கிருஷ்ணகிரி: இலவச பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 8, 2026
கிருஷ்ணகிரி உழவர் சந்தை விலை நிலவரம்

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (பிப்.8) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி ரூ.10-14, உருளை: ரூ.26, பெரிய வெங்காயம்: ரூ.30, மிளகாய்: ரூ.50, கத்திரி: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.32, பீர்க்கங்காய்: ரூ.30, சுரைக்காய்: ரூ.16, புடலங்காய்: ரூ.30, பாகற்காய்: ரூ.30, அவரை: ரூ.40, கேரட்: ரூ.55, பீன்ஸ்: ரூ.50, கீரை ஒரு கட்டு ரூ.15, கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.10, என விற்பனை செய்யப்படுகின்றன.
News February 8, 2026
கிருஷ்ணகிரி: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி!

மகராஜகடை அடுத்த சிந்தகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரின் மகள் கீர்த்தனா, 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் நண்பர் கீர்த்தனாவின் செல்போனில் புகைபடம் அனுப்பியுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் கீர்த்தனாவை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் நேற்று (பிப்.7) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 8, 2026
கிருஷ்ணகிரி: தீயில் விழுந்து துடிதுடித்து பலி!

குருபரப்பள்ளி அடுத்த ஜிங்களூரை சேர்ந்தவர் ஷேக் பையாஸ். இவர் தொடர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.6) வீட்டில் சமையல் செய்யும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த தீயில் விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


