News March 1, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவல்துறை காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட உட்கோட்ட பகுதிகளில் நேற்று (28.02.26) இரவு முதல் இன்று காலை வரை காவல்துறை ரோந்து பணிக்கான காவலர்களின் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளில் இரவு நேர ரோந்து போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களின் அலைபேசி எண்களும் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன.

Similar News

News March 1, 2026

ஓசூர்: சாதனைகளை அள்ளி தெளித்த MLA!

image

ஒசூா்: திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ”ஒசூரில் ரூ.100 கோடியில் தலைமை மருத்துவமனை, ரூ.550 கோடியில் சாக்கடை திட்டம், ரூ.50 கோடியில் பேருந்து நிலையம், ரூ.250 கோடியில் சாலைகளை 4 வழிச்சாலைகளாக தரம் உயா்த்தியது உள்ளிட்ட ரூ.3000 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன” எனக் கூறியுள்ளார்.

News March 1, 2026

கிருஷ்ணகிரியில் பயங்கர தாக்குதல்!

image

கந்திகுப்பம் அடுத்த அழகிய புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டு பிரகாஷை பீர் பாட்டிலால் பாபு தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பாபு உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2026

கிருஷ்ணகிரியில் பெண் துடிதுடித்து பலி!

image

காட்டிநாயனப்பள்ளியைச் சேர்ந்தவர் மோலுகம்மா. இவர் நேற்று முன்தினம் கிராமத்தின் அருகே சாலையோரத்தில் நடத்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அருண்குமார் என்பவர் மோதியதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!