News February 24, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (பிப்ரவரி.23) இரவு 10 மணி முதல் இன்று (பிப்ரவரி.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர்!

Similar News

News February 27, 2026

ஓசூர்: சசிகலாவை விளாசிய கே.பி.முனு சாமி!

image

ஓசூரில் நேற்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனு சாமி பேசியதாவது, ”அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்தவர் சசிகலா. கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்த ஒரு குடும்பம். இன்று எடப்பாடி பழனிசாமி மீது கொலை முயற்சி பழி சுமத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது” என விமர்சித்துள்ளார்.

News February 27, 2026

கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

image

அஞ்செட்டியைச் சேர்ந்த பெரியநாயகம் (40), இரண்டரை வயது குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாகப் புகார் எழுந்தது. குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் உடலில் கடுமையான உள்காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப். 26) பெரியநாயகத்தைப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அஞ்செட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 26, 2026

கிருஷ்ணகிரி: உங்களுக்கு மாதம் ரூ.3,000 வேண்டுமா?

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!