News January 2, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News January 22, 2026

கிருஷ்ணகிரி: உடல் நசுங்கி பலி!

image

கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி அருகே நிகழ்ந்த பயங்கர விபத்தில், கோபசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சாலையைக் கடந்தபோது அதிவேகமாக வந்த லாரி அவர் மீது ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது. தகவலறிந்து வந்த சூளகிரி போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 22, 2026

ஓசூரில் துடிதுடித்து பலி!

image

ஓசூர் அடுத்த அலசநத்தம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி முரளிதரன் 62 ஜன-21 காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

கிருஷ்ணகிரி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” இன்று (22.01.2026) செவங்கலம் வட்டம், இருதுகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பெற அழைப்பு.சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அனைவரும் ஆதார் கார்டு கொண்டு வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

error: Content is protected !!