News September 15, 2025

கிருஷ்ணகிரி: இரவில் வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News September 15, 2025

கிருஷ்ணகிரி பெண்களுக்கு செம வாய்ப்பு…

image

கிருஷ்ணகிரியில் உள்ள TATA ELECTRONICS நிறுவனத்தில் காலியாக உள்ள 50 Assembly Line Operator பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 25 வரை இருக்கலாம். மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> செ.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 15, 2025

கிருஷ்ணகிரி: விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே செல்போனில் அதிக நேரம் பேசியதாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், புது மணப்பெண் பூஜா (20) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பூஜா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2025

கிருஷ்ணகிரியில் புதிய நக்சல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய நக்சல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக சிரஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் பொறுப்பேற்க உள்ளார். இந்த நியமனம் நக்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. அவரது சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!