News September 14, 2025
கிருஷ்ணகிரி: இன்று முதல்வர் வீட்டுமனை பட்டா வழங்குகிறார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.14) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு விழாவில் 85,711 பயனாளிகளுக்கு முதல்வர் பட்டா வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் பட்டா அளிப்பது இதுவே முதல்முறை என தெரிவித்தார்.
Similar News
News September 14, 2025
பாதுகாப்பு வளையத்திற்குள் கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி அரசு விழாவில் கலந்துகொள்ளவுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பாதுகாப்புக்காக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் தலைமையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை இந்த பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News September 14, 2025
கிருஷ்ணகிரி: பொறியாளரா நீங்க? கை நிறைய சம்பளத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு 2 & 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், சிவீல், சுற்றுச்சூழல், தொழில்துறை மாசுபாடு குறைப்பு, எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், உலோகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும் செப்.24க்குள் இந்த <
News September 14, 2025
கிருஷ்ணகிரிக்கு முதல்வர் வருகை.. கலெக்டர் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் இன்று காலை நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். 2000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார். ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் மற்றும் கலைக்கல்லூரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.