News November 6, 2025
கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

கிருஷ்ணைரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 4, 2026
ஓசூரில் விமான நிலையத்துக்கு ஒப்புதல்?

ஓசூரில் விமான நிலைய திட்டம் தொடர் திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் நேற்று (பிப்.3) நடந்த பாராளுமன்ற தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன், டெல்லி IGI விமான நிலையத்திலிருந்து நொய்டா வெறும் 90 கி.மீ தொலைவில் அமையும் போது, ஓசூருக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். ஓசூரில் விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார். உங்க கருத்து என்ன?
News February 4, 2026
கிருஷ்ணகிரியில் தூக்கி வீசப்பட்டு பலி!

சூளகிரி அடுத்த கல்லுகுறுக்கியை சேர்ந்தவர் ராஜம்மாள் (50). இவர் தனது உறவினர்கள் இருவருடன் நேற்று முன்தினம் (பிப்.2) இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பின்னே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜம்மாள் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். மேலும் உடனிருந்த ரேணுகா, லட்மம்மா இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 4, 2026
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.


