News February 8, 2026

கிருஷ்ணகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன்<> இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். SHARE IT!

Similar News

News February 12, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்ட (KRP) அணையின் இன்றைய (பிப்.8) நீர்மட்டம் மொத்த 52 அடியில் 49.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 295 கனஅடி நீர் வரத்து கிடைக்க, 179 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது 1,363 எம்.சி.அடி நீர் சேமிப்பு இருப்பதால், விவசாயம் மற்றும் பிராந்திய குடிநீர் தேவைக்கு நிலையான நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

News February 12, 2026

கிருஷ்ணகிரியில் உடல் கருகி பலி!

image

தேன்கனிக்கோட்டை அருகே ஆலஅள்ளி கிராமத்தில் பெங்களூருவை சேர்ந்தவருடைய பண்ணையின் மின்வேலி அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று (பிப்.11) மதியம் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அப்பகுதி கோழிப்பண்ணையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மன்மதநாயக் (26) என தெரிந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 12, 2026

கிருஷ்ணகிரி: 2 வயது குழந்தை துடிதுடித்து பலி!

image

காரப்பட்டை சேர்ந்த மணிகண்டன் (30), மனைவி தெய்வானை செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இவர்களது 2-வது மகன் உத்தரன் (2). நேற்று உத்தரனையும் செங்கல் சூளைக்கு அழைத்து சென்ற போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளான். சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!