News April 13, 2024
கிருஷ்ணகிரி ஆட்சியர் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளம்பட்டியில் 100% வாக்கு செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரயு அங்குள்ள வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை சுவர்களில் ஒட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Similar News
News July 9, 2025
பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பில் பாராட்டு சான்றிதழ்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் சாப்பர்த்தி பஞ்சாயத்து மோரன அள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் காளிரத்தினத்திற்கு (ஜூலை 7) பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் சார்பில் நேற்று வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
News July 9, 2025
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் பேச்சு போட்டி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லுாரியில் வரும், 21ல், அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சு போட்டியும், 22ல், கருணாநிதி பிறந்த நாள் பேச்சு போட்டியும் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு காலையும், கல்லுாரி மாணவர்களுக்கு பிற்பகலும் நடக்கின்றன. அரசு உதவி பெறும், தனியார் பள்ளி கல்லுாரிகள், பொறியியல், மருத்துவம், பல்தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள் 2/2

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்