News October 22, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசால் பாா்வைக் குறைபாடுடைய மாணவா்களுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள கணினி ஆபரேட்டா் மற்றும் புரோகிராமிங் உதவியாளா் பயிற்சிக்கு சோ்க்கை நடைபெற உள்ளது. இதில், 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 22, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.22) 220.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 34 மி.மீ மழையும், போச்சம்பள்ளி 24.1 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, பர்கூரில் 24 மி.மீ, நெடுங்கல் 16.2 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

News October 22, 2025

கிருஷ்ணகிரி: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!