News August 25, 2024
கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளியில் மின் இணைப்பு துண்டிப்பு

தேன்கனிக்கோட்டை சந்தைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார இணைப்பிற்கு கல்வித்துறை சார்பில் மின்கட்டணம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரம் மின்வாரிய அதிகாரிகள் மின்சார இணைப்பை துண்டித்து சென்றதால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி அடைத்துள்ளனர்.
Similar News
News October 20, 2025
தீபாவளி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவசர அறிவிப்பு!

இந்த தீபாவளியை ஒலி, புகை இல்லா பசுமை தீபாவளியாக கொண்டாடுவோம் எனவும், குறைந்த சத்தம் மற்றும் குறைந்த மாசு உண்டாக்கும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன் படுத்தவும். அனுமதிக்கப்பட்ட நேரமான காலை 6.00 முதல் 7.00 வரை, மாலை 7.00 முதல் 8.00 வரை மட்டுமே பட்டாசு வெடிக்கவும். பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் அருகே வெடிக்க வேண்டாம் எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 19, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (19.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
கிருஷ்ணகிரியை உலுக்கிய சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தவர் சிவபூபதி (45). கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கே.சி. நகர் பகுதியில் உள்ள குறிஞ்சி நகரில் மனைவி பார்வதி, மகன்கள் நரேந்திர பூபதி (14), லதீஷ் பூபதி (11) ஆகியோருடன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வசித்துவந்தார். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த நிலையில் திடீர் பண நஷ்டம் ஏற்பட்டதால், நேற்று (அக்.18) காலை இரு மகன்களை கொன்று, தந்தை தற்கொலை செய்து கொண்டார்.