News February 1, 2025
கிருஷ்ணகிரி அதிமுக மாவட்ட செயலாளர் அறிக்கை

பேரறிஞர் அண்ணா அவர்களின் 56-வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி அதிமுக சார்பில் பிப்ரவரி 3-ம் தேதி அந்தந்த பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அதிமுக எம்எல்ஏ கே. அசோக் குமார் அவர்கள். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
Similar News
News March 2, 2026
கிருஷ்ணகிரியில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தளி தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்க்கரசன் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளை தீவிர படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
News March 2, 2026
ஓசூர்: கடத்தலில் ஈடுபட்ட போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று (மார்ச் 1) சிப்காட் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் 528 கர்நாடக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த நாகரசம்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் நாகராஜ் (41) என்பவரை போலீஸார் கைது செய்தனர். சட்டவிரோத விற்பனைக்காக மது கடத்திய அவர் மீது, தற்போது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
கிருஷ்ணகிரி: ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த இளைஞர்!

தேன்கனிகோட்டை அருகே கோட்டைவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜிபிசன். இவர் மத்திகிரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று முன்தினம் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஜெபிசன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


