News October 21, 2025

கிருஷ்ணகிரியில் 400 பேர் பலி!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜனவரி முதல் அக்டோபர் 12 வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் சம்பவ இடத்திலும், சிகிச்சையிலும் சேர்த்து 400 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023ல் 753 ஆக இருந்த உயிரிழப்பு 2024ல் 683 ஆக குறைந்தது. நடப்பாண்டில் இறப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் போலீசார் கருதுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும் அறிவுரை வழங்கப்படுகிறது.

Similar News

News October 21, 2025

கிருஷ்ணகிரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<> லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

News October 21, 2025

கிருஷ்ணகிரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.21) 42.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், பர்கூரில் அதிகபட்சமாக 18மி.மீ மழையும், போச்சம்பள்ளி 7.4 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கே.ஆர்.பி அணை 7 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும் இன்று பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாய் பெய்யும் என்று எதிரிபார்க்கப்டுகிறது.

error: Content is protected !!