News January 9, 2026

கிருஷ்ணகிரியில் 2 பேர் அதிரடி கைது!

image

கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி கிராமத்தில் கடந்த டிசம்பர் 12-ம் அன்று தனியார் நிறுவன பேருந்து மீது பன்றி வெடி வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். இந்த வழக்கில் சக்திவேல், சேகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.8) சேகர், சக்திவேல் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 25, 2026

கிருஷ்ணகிரி: இளைஞர்களே செம வாய்ப்பு..!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

News January 25, 2026

கிருஷ்ணகிரி :இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

கிருஷ்ணகிரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை,மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 25, 2026

கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி; நாய்கள் வெறிச்செயல்!

image

போச்சம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி தேவன். நேற்று (ஜன.24) அதிகாலை நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்த இவர் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறி சாலையில் இழுத்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் தெரு நாய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!