News August 16, 2024
கிருஷ்ணகிரியில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம், விதிகளின்படி, தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 26 கடைகள், நிறுவனங்கள், 26 உணவு நிறுவனங்கள், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 58 நிறுவனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
BREAKING: கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து… இருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே இன்று (ஆக.27) இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மணிவண்ணன்(43) என்பவரும், அவரிடம் லிப்ட் கேட்டு வந்த கர்நாடகவைச் சேர்ந்த முரளி (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 27, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, BCA போதும்… மத்திய அரசு வேலை ரெடி

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 27, 2025
கிருஷ்ணகிரி மக்களே நோட் பண்ணிக்கோங்க

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 27.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது