News January 19, 2026
கிருஷ்ணகிரியில் வாலிபர் பரிதாப பலி!

சனமாவு வனப்பகுதி அருகே சாலையைக் கடக்க வந்த மான் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மான் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 27, 2026
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு; CLICK NOW!

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது <
News January 27, 2026
கிருஷ்ணகிரியில் ஷாக்; ரோட்டில் கத்தியோடு நின்ற நபர்!

போச்சம்பள்ளி அடுத்த மடத்தனுர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (61). இவர் நேற்று (ஜன.26) மாலை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கீழ் மைலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (46) வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.5,100 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 27, 2026
கிருஷ்ணகிரியில் மூதாட்டி திடீர் மரணம்!

ஓசூர் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் சரோஜா 60. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) வீட்டில் இருந்து வெளியே சென்ற போது திடிரென மூக்கண்டப்பள்ளி சாலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


