News June 5, 2024
கிருஷ்ணகிரியில் லேசான மழைக்கு வாய்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
Similar News
News October 19, 2025
கிருஷ்ணகிரி: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
1) இந்தியன் ஆயில்: 18002333555
2) பாரத் பெட்ரோல்: 1800224344
3) HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News October 19, 2025
கிருஷ்ணகிரி மக்களே நாளை இதை மறவாதீர்!

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.19) 48 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், பர்கூரில் அதிகபட்சமாக 41.8 மி.மீ மழையும், சூளகிரி 3 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, சின்னார் அணை 2 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.