News December 17, 2025

கிருஷ்ணகிரியில் மின்தடை அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், ராஜாஜி நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 – மாலை 5 மணி வரை மின்சேவை துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.

Similar News

News December 23, 2025

கிருஷ்ணகிரி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

கிருஷ்ணகிரி: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News December 23, 2025

ஓசூர்: மாநகரப் பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

image

பெங்களூர் டு ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் அருகே ஜூஜவாடி சோதனை சாவடியில் நேற்று (டிச-22) சிப்காட் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெடுஞ்செழியன் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாநகர பேருந்தில் ஓடிசாவை சேர்ந்த வட மாநில இளைஞர் ஒருவர் சுமார் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!