News April 13, 2025

கிருஷ்ணகிரியில் மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

image

திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் முனியம்மாள்(70). இவரது கணவர் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், மகன், மருமகளுடன் வசித்து வந்தார். கடந்த, 8 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற முனியம்மாள் மாயமான நிலையில், நேற்று முன்தினம் கும்மனுார் தென்பெண்ணையாற்றில் சடலமாக மிதந்தார். மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 13, 2025

இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 13, 2025

தீராத நோய் தீர்க்கும் கந்தர்மலை முருகன் கோவில்

image

காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் கந்தர்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ‘வள்ளி குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. நாளை தமிழ் புத்தாண்டுடை ஒட்டி இக்கோயிலுக்கு சென்று இங்குள்ள குளத்தில் நீராடினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும். மேலும் குளத்தின் தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால் சகல தோஷங்களும் நீங்கும், வியாபாரம் விருத்தியாகும். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!