News December 9, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

கிருஷ்ணகிரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இராயக்கோட்டை (STADIUM அருகில்), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் டிச.13 காலை 8 – பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 5,000 மேற்ப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 10, 2025
கிருஷ்ணகிரி மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

▶️நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
▶️ மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
▶️பேரூராட்சிகள்- 06
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா-8
▶️வருவாய் வட்டங்கள் – 8
▶️வருவாய் கிராமங்கள்-636
▶️ஊராட்சி ஒன்றியம்-10
▶️கிராம பஞ்சாயத்து- 333
▶️MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
▶️MLA தொகுதி- 6
▶️மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க
News December 10, 2025
கிருஷ்ணகிரி வாக்காளர்களே இதை தெரிஞ்சிக்கோங்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தியமைத்தல் 2026 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நவ. 4 முதல் டிச 4 (நீட்டிப்பு டிச.11) வரை நடைபெறும். புதுப்பிப்பு, சேர்த்தல், நீக்கல் மனுக்கள் டிச. 9 முதல் ஜன. 8 வரை பெறப்படும். திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News December 10, 2025
கிருஷ்ணகிரி அருகே பயங்கர விபத்து.. ஒருவர் பலி

கிருஷ்ணகிரி சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போத்தாபுரம் அருகே நேற்று (டிச.09) இரவு மணிகண்டன் என்பவர் வேலை முடித்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயற்சித்த போது அதிவேகமாக வந்த ஐயப்ப பக்தர்கள் வாகனம் அவரை இடித்துச் சென்றது. அடிபட்டு கீழே விழுந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யும் போது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


