News November 6, 2025
கிருஷ்ணகிரியில் மஞ்சள் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இன்று (நவ.06) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை பல்வேறு பகுதிகளில் மழையானது கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News November 6, 2025
கிருஷ்ணகிரி: உங்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பது யார்?

கிருஷ்ணகிரி மக்களே, வாக்காளர்கள் சரி பார்க்கும் இந்திய தேர்தல் ஆணையம் அலுவலர்கள் விபரம் வெளியானது. இந்த https://erolls.tn.gov.in/blo/ லிங்க் மூலம் இதனை தெரிந்துகொள்ளலாம். நீங்கள் வீட்டில் இருக்க முடியாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கணக்கெடுப்பு என்ற பெயரில் வேறு யாரும் வருகிறார்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவருக்கும் பகிரவும்!
News November 6, 2025
கிருஷ்ணகிரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
கிருஷ்ணகிரியில் பதிபவான மழை விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நவ.06) காலை 6 மணி நிலவரப்படி 33.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், நெடுங்கல் அதிகபட்சமாக 9 மி.மீ மழையும், கிருஷ்ணகிரி 5.30 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, பருகூர் 5.20 மி.மீ, ராயக்கோட்டை 3 மி.மீ, தேன்கனிக்கோட்டை 3 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.


