News September 18, 2025
கிருஷ்ணகிரியில் பெரும் விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கோனேரிப்பள்ளி பகுதியில், தனியார் பேருந்து ஒன்று கார், இருசக்கர வாகனம், மற்றும் டிராக்டர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை தடுப்பைத் தாண்டி அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். காவல்துறையினர் இது குறித்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Similar News
News September 18, 2025
சென்னையை போல மாறும் ஓசூர்!

தமிழ்நாட்டின் தொழில் மற்றும் தொழில்நுட்ப மையமாக ஓசூரை உருவாக்க, மாநில அரசு தீவிரமாகப் பணியாற்றுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓசூரில் அவுட்டர் ரிங் ரோடு, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு மற்றும் பிற முக்கிய சாலைகளை இணைத்து, ஒரு அறிவுசார் வழித்தடத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், சென்னை போன்று ஓசூரும் ஒரு அறிவுசார் மையமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!
News September 18, 2025
கிருஷ்ணகிரி: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

கிருஷ்ணகிரி பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <<-1>>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க மக்களே!
News September 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று மொத்தம் 203.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓசூர் பகுதியில் அதிகபட்சமாக 43.0 மி.மீ மழை பெய்துள்ளது. இது தவிர, கிருஷ்ணகிரி அணை (கே.ஆர்.பி அணை) பகுதியில் 26.80 மி.மீ மழையும், போச்சம்பள்ளியில் 25.10 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.