News November 6, 2025
கிருஷ்ணகிரியில் பதிபவான மழை விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நவ.06) காலை 6 மணி நிலவரப்படி 33.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், நெடுங்கல் அதிகபட்சமாக 9 மி.மீ மழையும், கிருஷ்ணகிரி 5.30 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, பருகூர் 5.20 மி.மீ, ராயக்கோட்டை 3 மி.மீ, தேன்கனிக்கோட்டை 3 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News February 14, 2026
கிருஷ்ணகிரி: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
கிருஷ்ணகிரி:காவலருக்கு குவியும் பாராட்டு..!!

சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் பிப்-13ல் தனியார் தொழிற்சாலை மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தின்போது பேருந்தின் கண்ணாடிகள் மற்றும் உடைந்த பாகங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன.
இவற்றை காவலர் ஒருவர் சீருடையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் சாலையைச் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் பலரும் அந்த காவலருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.!
News February 14, 2026
கிருஷ்ணகிரியில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டக் குறைதீர்க்கும் முகாம் இன்று (பிப்.14) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 8 வட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களில் இம்முகாம் நடைபெறும். இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு போன்ற திருத்தங்களைச் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆறிவிப்பு.


