News August 20, 2025
கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை

கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஐக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி-1, வீட்டு வசதி வாரியம் பகுதி-2 பழையபேட்டை, குண்டலபட்டி, சுத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
ஓசூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஓசூர் பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை (ஜன.26) குடியரசு தினம் கொண்டாடுவதை ஒட்டி, ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. ஸ்ரீதரன் தலைமையில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டன. மேலும், ஜூஜூவாடி உள்ளிட்ட மாநில எல்லைச் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையைப் பலப்படுத்திச் சோதனை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
கிருஷ்ணகிரி: வாலிபர் துடிதுடித்து பலி!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அகிலேஷ் (35). இவர், உத்தனப்பள்ளி அருகே பாத்தக் கோட்டா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை நிறுவனத்தில் இருந்த எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதை அறியாத மற்றோரு தொழிலாளி எந்திரத்தை இயக்க அகிலேஷ் எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன-25) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


