News April 24, 2024
கிருஷ்ணகிரியில் தொடரும் பறக்கும்படை சோதனை

தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
Similar News
News January 11, 2026
கிருஷ்ணகிரி: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

கிருஷ்ணகிரியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <
News January 11, 2026
ஓசூர்: ஆன்லைன் லோன் செயலியால் வந்த வினை!

ஓசூர், ராயக்கோட்டை ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் ராணி (57) இவர் நேற்று தனியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர், அவரிடம் இருந்த நகைகளை பறித்து சென்றுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் விசாரித்த போலீஸ், திருப்பூரை சேர்ந்த தீபன்ராஜ் என்பவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லோன் ஆப்பில் கடன் பெற்று, அதனை அடைக்க திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
News January 11, 2026
கிருஷ்ணகிரி: தொழிலதிபர் குத்திக் கொலை – போலீஸ் அதிரடி

கெலமங்கலம், குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் குரு பிரசாத், கடந்த 7ம் தேதி குத்திக் கொலை செய்யப்பட்டார். பணப் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் பதுங்கி இருந்த சுரேஷ், பாபு, நவீன், தேவராஜ், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.


