News March 22, 2024
கிருஷ்ணகிரியில் தேர்தல் அலுவலகம் திறப்பு

திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அலுவலகத்திற்கான பந்தல்கால் நடும் பணியை கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தலைமை தாங்கி நேற்று (மார்ச் 21) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக, காங். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Similar News
News September 7, 2025
கிருஷ்ணகிரி : தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, நமது மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி அலுவலகங்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை, குப்பைகள் அகற்றப்படவில்லை, குடிநீர் வரவில்லை, சாலை, மேம்பாலம் சேதம் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவித்து தீர்வுகளை பெறலாம்.
▶️ ஓசூர் – 04344-247666
▶️ கிருஷ்ணகிரி – 7397396252
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News September 7, 2025
கிருஷ்ணகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 6, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp – ல் வரும் -.apk File – களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள்.
மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். அல்லது www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும்.