News September 13, 2025

கிருஷ்ணகிரியில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஷேர்

Similar News

News September 13, 2025

கிருஷ்ணகிரி: சிசிடிவி பொருத்த, பழுது நீக்க இலவச பயிற்சி

image

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, CCTV கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்குவதற்கான 13 நாள் இலவசப் பயிற்சியை வழங்குகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மேலும் தகவல்களுக்கு, 94422 47921, 90806 76557 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.ஷேர்

News September 13, 2025

கிருஷ்ணகிரி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்ய இன்று (செப்.13) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்யப்படும். இதில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் தற்கொலை

image

கிருஷ்ணகிரி பாரதியார் நகரைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் முகமது ரபிக் (48), தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், கடந்த செப்.11 அன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலையில், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை.

error: Content is protected !!