News March 13, 2026
கிருஷ்ணகிரியில் திமுக கூட்டணிக்கு பெருகும் ஆதரவு!

கிருஷ்ணகிரி: தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெட்டமுகிலாலம் ஊராட்சி கொடகறை கிராம மக்களை, நேற்று தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் சந்தித்தார். அப்போது, கிராம பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கே முழு ஆதரவையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதன் மூலம், திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகள் சேர்ந்துள்ளன. இது குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க!
Similar News
News April 7, 2026
கிருஷ்ணகிரி: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 7, 2026
கிருஷ்ணகிரி: பாதி வழியில் எரிபொருள் காலியா? NO TENSION!

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News April 7, 2026
கிருஷ்ணகிரி: காதலிக்கு திருமணம்: இளைஞர் தற்கொலை மிரட்டல்!

மத்தூர் அருகே வேங்கானூர் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார்(22), ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்து மனவேதனை அடைந்தார். இதனால், நேற்று (ஏப்-06) அப்பகுதியிலுள்ள உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பத்திரமாக மீட்டுத் தரையிறக்கினர்.


