News October 23, 2025

கிருஷ்ணகிரியில் டன் கணக்கில் குப்பை

image

கிருஷ்ணகிரியில் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், நகரத்தின் 33 வார்டுகளில் பட்டாசு வெடிப்பால் குப்பைகள் அதிகமாக தேங்கின. கமிஷனர் சதீஷ்குமார் உத்தரவின்படி, 10 மேற்பார்வையாளர்கள் தலைமையில் 131 துாய்மை பணியாளர்கள் இணைந்து, 30 டன் பட்டாசு குப்பையை 2 நாளில் சேகரித்து, நகராட்சி வாகனங்கள் மூலம் குப்பை கிடங்கிற்கு அனுப்பினர்.

Similar News

News October 23, 2025

இன்று மழை இல்லை – பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இலகு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழைக்கு இடைவேளையாக, இன்று (அக்.23) காலை வானம் தெளிவாக காணப்பட்டது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் புன்னகையுடன் தங்கள் பள்ளிகளுக்குச் சென்றனர். மாவட்ட வானிலை மையம் தெரிவித்ததாவது – அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மேகமூட்டம் காணப்பட்டாலும், மழைக்கு வாய்ப்பு.

News October 23, 2025

கிருஷ்ணகிரியில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க

News October 23, 2025

கிருஷ்ணகிரி: 32 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

image

கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களில், 31 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாவட்ட எஸ்.பி தங்கதுரை கூறுகையில், ‘மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடப்பாண்டு இதுவரை 32 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!