News January 22, 2025
கிருஷ்ணகிரியில் ஜன.24ல் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.24ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மின்நகர், பத்தளப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் நாளை (ஆக.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..!
News August 17, 2025
ஓசூர் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பெங்களூர் நோக்கி படையெடுத்துள்ளதால் கிருஷ்ணகிரி ஓசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி, மார்கெட் பகுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடத்திலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 17) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.