News March 27, 2025

கிருஷ்ணகிரியில் சிறிய இங்கிலாந்து

image

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது இந்த தளி தோட்டம். இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதமான வானிலை நிலவுகிறது. இது இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலையை ஒத்திருப்பதால் ‘சிறிய இங்கிலாந்து’ என்று பிரிட்டிஷார் பெயர் சூட்டினார். இந்த காலநிலை காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை பயிரிடுவதற்கு ஏற்றதாக அமைவதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு ஆண்டு முழுவதும் வருகிறார்கள். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News March 31, 2025

தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் பலி

image

மாரண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (37), இவருக்கு பிரமிளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை முனிரத்தினம், அவருடைய மூத்த மகன் சந்தோஷ் குமாருடன் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றனர். அங்கு எதிர்பாராத விதமாக இருவரும் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதற்குள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

News March 31, 2025

பிறை தென்பட்டது : நாளை ரமலான் பண்டிகையை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மசூதி.

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ஊராட்சியில் நாளை ரம்ஜான் பண்டிகைக்காக மசூதி மிகவும் அழகாக அலங்கரிக்க பட்டுள்ளதை படத்தில் காணலாம். பிறை தென்பட்டதை அடுத்து நாளை மார்ச் 31 தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

News March 30, 2025

பெங்களூரில் மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் காலியாக உள்ள 33 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 01.03.2025 தேதியின்படி 32 வயது வரை இருக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ரூ.45,000- ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து வரும் ஏப்ரல் 16க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!