News October 25, 2025
கிருஷ்ணகிரியில் சிறப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள், தங்களது வார்டு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் கூறலாம்.
Similar News
News January 25, 2026
கிருஷ்ணகிரி: தொழிலாளி மரணம்; தொடரும் மர்மம்!

போச்சம்பள்ளியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி வேலாயுதம் (40). இவர் தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அங்குள்ள கரும்பு அரவை கூடத்தில் தூங்க சென்ற வேலாயுதம் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இந்த மர்ம மரணம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
ஓசூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஓசூர் பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை (ஜன.26) குடியரசு தினம் கொண்டாடுவதை ஒட்டி, ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. ஸ்ரீதரன் தலைமையில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டன. மேலும், ஜூஜூவாடி உள்ளிட்ட மாநில எல்லைச் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையைப் பலப்படுத்திச் சோதனை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
கிருஷ்ணகிரி: வாலிபர் துடிதுடித்து பலி!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அகிலேஷ் (35). இவர், உத்தனப்பள்ளி அருகே பாத்தக் கோட்டா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை நிறுவனத்தில் இருந்த எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதை அறியாத மற்றோரு தொழிலாளி எந்திரத்தை இயக்க அகிலேஷ் எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


