News January 12, 2026

கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு விழா

image

கிருஷ்ணகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மத நல்லிணக்கத்தை நிலை நாட்டும் வகையில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று (ஜன.11) நடைபெற்றது. தேன்கனிக்-கோட்டை சப்தகிரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Similar News

News January 30, 2026

கிருஷ்ணகிரியில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

கிருஷ்ணகிரியில் அடிதடி; 5 பேர் மீது வழக்கு!

image

ராயக்கோட்டை அடுத்த பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருக்கும் இவரது தம்பி பெத்தேகவுடாவுக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) நிலத்தின் அருகே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் சண்டையிட்டு கொண்டனர். இதையடுத்து இருதரப்பையும் சேர்ந்த கோவிந்தன், மஞ்சுளா, ரமேஷ், சந்திரம், பெத்தேகவுடா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

கிருஷ்ணகிரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!