News March 29, 2025
கிருஷ்ணகிரியில் சனி தோஷம் நீக்கும் அற்புத தலம்

கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் தீர்த்தகுள காசி சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதால் இங்கு உள்ள சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி நடைபெறுவர்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டு வாழ்க்கை வளமாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 25, 2026
மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; 3 பேர் தலைமறைவு!

உத்தனப்பள்ளி அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (69). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் இடையே நேற்று (ஜன.24) நிலப்பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் சரஸ்வதி, லக்ஷ்மணன், மதுகுமார் ஆகியோர் தாக்கியதில் படுகாயயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.
News January 25, 2026
கிருஷ்ணகிரி: தொழிலாளி மரணம்; தொடரும் மர்மம்!

போச்சம்பள்ளியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி வேலாயுதம் (40). இவர் தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அங்குள்ள கரும்பு அரவை கூடத்தில் தூங்க சென்ற வேலாயுதம் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இந்த மர்ம மரணம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
ஓசூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஓசூர் பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை (ஜன.26) குடியரசு தினம் கொண்டாடுவதை ஒட்டி, ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. ஸ்ரீதரன் தலைமையில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டன. மேலும், ஜூஜூவாடி உள்ளிட்ட மாநில எல்லைச் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையைப் பலப்படுத்திச் சோதனை செய்து வருகின்றனர்.


