News February 10, 2026

கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

image

சிலேப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (38) 2020-ல் மின்சாரம் தாக்கி இறந்தார். அதே ஆண்டு அவரது மனைவி ஜமுனா, 2 குழந்தைகள் சாலை விபத்தில் பலியாகினர். ஜமுனாவின் தம்பி கார்த்திக் (35) அக்கா- மைத்துனரின் விபத்து காப்பீடுகளுக்கு உரிமை கோரினார். முருகேசனின் தந்தை வெங்கடப்பா தனக்கு தருமாறு மனு அளித்தால் கார்த்திக், அவரை வெட்டி கொன்றார். இவ்வழக்கில் கார்த்திக்குக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

Similar News

News February 19, 2026

கிருஷ்ணகிரியில் கூண்டோடு கைது!

image

கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் 15-வது நாளாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய அண்ணா சிலை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 260 அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

News February 19, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.19) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

News February 19, 2026

கிருஷ்ணகிரி: பற்றி எரிந்த வீடு; கதறிய குழந்தைகள்!

image

அணைக்கட்டை சேர்ந்த மாதேஷ் (32)- வரலட்சுமி (27) தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மனைவியுடன், மாதேஷ் வேலைக்கு சென்று விட்டார். ஓலை வீட்டில் குழந்தைகள் 2 பேரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீடு திடீரென தீப்பிடிக்க குழந்தைகள் வெளியே ஓடி விட்டனர். முற்றிலும் கருகிய வீட்டில் ரூ.40 ஆயிரம், 1 பவுன் தங்க நகை சாம்பல் ஆகின. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

error: Content is protected !!