News January 2, 2026
கிருஷ்ணகிரியில் கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
கிருஷ்ணகிரியில் தூக்கி வீசப்பட்டு பலி!

ஓசூர் அடுத்த சீத்தப்பன் தொட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் (41). இவர் நேற்று இரவு (ஜன.27) மாலை பெங்களூரு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
கிருஷ்ணகிரியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

அசாம் மாநிலத்தை சேர்ந்த சானு தாண்டி (26) என்பவர் பேடரப்பள்ளி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு ஜன-27 இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சானு விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
கிருஷ்ணகிரி: இனி பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதை உடனே Share பண்ணுங்க..!


