News August 16, 2024
கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இன்று மழை பெய்யுமா?
Similar News
News December 15, 2025
கிருஷ்ணகிரி: இலவச சிலிண்டருக்கு APPLY HERE!

கிருஷ்ணகிரி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News December 15, 2025
கிருஷ்ணகிரி: இளம் பெண் ஊழியர் படுகாயம்!

ராயக்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை, தனியார் நிறுவன பஸ், பாலகுறி பகுதியில் வந்துகொண்டிருந்த போது ‘டமார்’ என பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அப்போது, பஸ்ஸின் கண்ணாடி உடைந்ததில், ஆந்திராவைச் சேர்ந்த மதர்சா தாரணி(22) என்ற பெண் ஊழியர் படுகாயமடைந்தது தெரியவந்தது. தற்போது, மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்த்வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 15, 2025
கிருஷ்ணகிரியில் இரவு ரோந்து தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (டிச.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல் துறையை தொடர்புகொள்ள 100 டயல் செய்யலாம்.


