News March 10, 2025
கிருஷ்ணகிரியில் கடும் வெப்ப அலை வீசும்

கிருஷ்ணகிரியில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
Similar News
News August 15, 2025
கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா விருது வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று 79ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கலந்துகொண்டு கொடியேற்றினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பணிகளில் சிறந்து விளங்கும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். இதில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 15, 2025
கிருஷ்ணகிரி: இலவசமாக 2 GB டேட்டா, அன்லிமிட்டட் CALL, 100 SMS

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாட்டங்களில் BSNL 4G சேவை 341 கோபுரங்கள் மூலம் வழங்கப்படுகிறது. கூடுதலாக 50 கோபுரங்களும் அமைக்கப்படுகின்றன. மேலும், ரூ.1-க்கு ஒரு மாத 4G சேவை வழங்கும் திட்டத்தின்கீழ் இலவசமாக சிம்கார்டு வழங்கப்படுகின்றன. இதில், 2 GB ஸ்பீடு டேட்டா, 100 SMS/DAY, அன்லிமிட்டட் கால் வசதிகள் உள்ளன. இது வரும் 31 ஆம் தேதி வரை உள்ளது என தர்மபுரி மண்டல BSNL துணை மேலாளர் தெரிவித்துள்ளார். SHARE IT
News August 15, 2025
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் டீன் பதவியேற்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக பணியாற்றி வந்த டாக்டர் எம்.பூவதி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கே.சத்யபாமா கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.