News April 18, 2024
கிருஷ்ணகிரியில் உருஸ் திருவிழா தேதி மாற்றம்

கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு சையத்பாஷா தர்காவில் நாளை துவங்க இருந்த உருஸ் திருவிழா, நாடாளுமன்ற தேர்தலால் வரும் 21ஆம் தேதி துவங்க உள்ளது. அதன்படி 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு அனைத்து ஜமாத் கமிட்டியினர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கையுடன் சந்தனகுடம் மலர் அலங்காரத்துடன் ஊர்வலம் நடக்கிறது.
Similar News
News December 31, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (டிச-31) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
கிருஷ்ணகிரி வாக்காளர்கள் கவனத்திற்கு..

கிருஷ்ணகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
கிருஷ்ணகிரி: 2025-ல் குறைந்த குற்றச் சம்பவங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டை விட 2025-ல் கொலை (14%), வழிப்பறி (32%) மற்றும் கள்ளத்தனம் (30%) உள்ளிட்ட குற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்து மரணங்கள் 4% குறைந்துள்ள நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்காக ₹1.85 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், ₹1.15 கோடி மதிப்பிலான மது மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


