News June 26, 2024
கிருஷ்ணகிரியில் இலவச பஸ் பாஸ் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 270 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று (ஜூன் 25) வழங்கினார். உடன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News December 27, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
கிருஷ்ணகிரியில் கோமாரி தடுப்பூசி முகாம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் டிச.29 முதல் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் எருமாம்பட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட கூரம்பட்டி கிராமத்தில் தொடங்கப்பட்டு, ஜன.28 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
கிருஷ்ணகிரியில் மின் தடையா..? உடனே CALL!

கிருஷ்ணகிரி மக்களே… தற்போது பெய்துவரும் மழையால் உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!


