News August 28, 2025

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்து விபத்து

image

நேற்று காவிேரிப்பட்டினத்தில் இருந்து தர்மபுரி சென்ற அரசு பேருந்தில் கார் பின்புறத்தில் மோதியது. காரில் இருந்து பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News August 28, 2025

தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ மறைவு

image

தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R .சின்னசாமி இன்று காலை 10.30 மணி அளவில் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்நிலையில் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் 1971,1984 மற்றும் 1989 ஆண்டு தேர்தல்களில் தருமபுரி எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார்.

News August 28, 2025

தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540114>>தொடர்ச்சி<<>>

News August 28, 2025

தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தை பாதுகாப்பு பயன்பெற குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க

error: Content is protected !!