News January 25, 2026
கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி; நாய்கள் வெறிச்செயல்!

போச்சம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி தேவன். நேற்று (ஜன.24) அதிகாலை நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்த இவர் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறி சாலையில் இழுத்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் தெரு நாய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04343-292275) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
News January 26, 2026
கிருஷ்ணகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04343 – 232830 தெரிவியுங்க. SHARE IT!
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

கிருஷணகிரிக்குட்பட்ட மின் நிலையங்களில் நாளை (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி சிகரலபள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கடச முத்திரம், தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், ஜெகதேவி, சத்தலட் பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.


