News May 7, 2025
கிருஷ்ணகிரியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News September 19, 2025
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

செப்டம்பர் 19ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள். 1.கிருஷ்ணகிரி- நகராட்சி அலுவலக வளாகம் (காந்தி ரோடு) 2.கட்டிக்கானப்பள்ளி – பிஎல்எப் பில்டிங் 3.வேப்பனப்பள்ளி- ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி (ராமச்சந்திரம்) 4.ஓசூர் – உளியாளம், பட்டாளம் சமுதாயக்கூடம்.(சென்னசந்திரம் கிராமம்) 5.தளி – உரிகம் அரசு மேல்நிலைப்பள்ளி 6.சூளகிரி- (கட்டிக்கானப்பள்ளி, மாரண்டப்பள்ளி) ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி.
News September 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

OLX App மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பயனர்களை குறிவைத்து, மோசடிக்காரர்கள் வாங்க விருப்பம் காட்டுவதாக சொல்லி Google Pay, PhonePe போன்ற அப்களில் பணம் பெறுவதற்கான போலி லிங்குகளை அனுப்புகின்றனர். அதில் பின் எண் பதிவு செய்யும்படி கூறுவர். அப்படி செய்தால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் இழக்கும் அபாயம் உண்டு. எனவே ஏமாற வேண்டாம். சந்தேகத்திற்கு 1930 அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம்.
News September 18, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தீபாவளி 2025 வரும் நிலையில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி 30.09.2025க்கு முன்னர் இ-சேவை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்தார்.