News January 19, 2026

கிரீன்லாந்தில் டிரம்புக்கு எதிராக பேரணி

image

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கத்துடன் பேரணி நடத்தினர். கிரீன்லாந்து மட்டுமின்றி டென்மார்க்கின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது. கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் டிரம்பின் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Similar News

News January 30, 2026

உள்ளாடையுடன் போட்டோ ஷூட்டுக்கு NO சொன்ன நடிகை

image

போட்டோஷூட் என்ற சிலர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். போட்டோ எடுக்க சென்ற ரூமிற்குள் இருந்த மூவர் தன்னை ‘Lingerie’ அணியும் படி வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியே வந்து விட்டதாகவும், தற்போதும் அச்சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

MGR போல விஜய் களத்தில் செயல்படவில்லை: செல்லூர்

image

விஜய் அறையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மேலும், விஜய்யை நாங்கள் திட்டவில்லை, ஆனால் அவர் எங்களை திட்டினால் அமைதியாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் அழைத்து ஆறுதல் கூறுவதெல்லாம் புதிதாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். MGR போல விஜய் களத்தில் இறங்கி அரசியல் செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

News January 30, 2026

இப்படியெல்லாம் ஒரு சட்டமா.. அட்டூழியத்தின் உச்சம்!

image

ஆப்கனில் பெண்களுக்கு எதிரான <<18976535>>தாலிபான்<<>> அரசின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அங்கு புதிதாக கொண்டுவந்துள்ள ஒரு சட்டத்தில், கணவர்களோ/முதலாளிகளோ பெண்களை தங்கள் விருப்பப்படி அடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டால் மட்டும் 15 நாள்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் கணவரின் அனுமதியின்றி பெண்கள் உறவினர் வீட்டிற்கு சென்றால் 3 மாதங்கள் சிறை தண்டனை என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!