News April 9, 2025
கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கிரிவலப் பாதையில் தினமும் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பங்குனி மாத கிரிவலப் பௌர்ணமி 12-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4:15 மணிக்கு தொடங்கி மறுநாள் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:08 மணிக்கு நிறைவடைகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News April 17, 2025
கஷ்டங்களை நீக்கும் முருகன் தேங்காய் பரிகாரம்

உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
வேலைவாய்ப்புகளை தேடுபவரா நீங்கள்?

தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிமையாக அறிந்துகொண்டு விண்ணப்பிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் வேலைவாய்ப்புகளுக்கான https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனிப்பட்ட இணையதளம் செயல்படுறது. இதில் குறைந்தபட்சம் ரூ.7,500 முதல் அதிகபடியாக ரூ.1 லட்சத்திற்கு அதிகமான சம்பளத்தில் 30,390 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்டவட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வட்டார ஊராட்சி) வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) வரை அளிக்கலாம்.